Home Local news ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேர் கைது!

ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேர் கைது!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேரை இன்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவிலிருந்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கந்தளாய், பேராறு, வட்டுக்கச்சி மற்றும் மத்ரஸா நகர் போன்ற பகுதிகளில் கடைகளைத் திறந்து இவர்கள் வியாபாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே இவர்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹோட்டல்கள், சில்லறைக் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு அவர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஹரோயின்னுடன் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு விளக்கமறியல்!
Previous articleவீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள் – பாதுகாப்பு கடமையில் இராணுவம் மற்றும் பொலிஸ்
Next articleஜனாதிபதி கடத்தப்பட்டாரா? பௌத்த தேரர் வெளியிட்டுள்ள தகவல்;