Home Local news மங்களவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

மங்களவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கள சமரவீரவிற்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டு தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கோவிட் 19 தொடர்பான நிமோனியா ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

எனினும், சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மங்கள சமரவீரவிற்கு சில நாட்களுக்கு முன்னர் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்.அளவெட்டியில் வாள்வெட்டு குழு உறுப்பினர் வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள்களுடன் கைது
Previous articleஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்
Next articleகன்னித்தன்மையுடன் இருக்கும் ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த யுவதி;