Home jaffna news யாழ்.மாவட்டத்தில் ஆபத்தான வைரஸ்; கந்தரோடையில் உயிரிழந்தவருக்கு டெல்டா

யாழ்.மாவட்டத்தில் ஆபத்தான வைரஸ்; கந்தரோடையில் உயிரிழந்தவருக்கு டெல்டா

யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ளமை கண்டரியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நபர் கடந்த செவ்வாய் கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டநிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கந்தேரோடையை சேர்ந்த குறித்த நபருக்கு ஆபத்தான டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் அவருக்கும் டெல்டா வகை திரிவு வைரஸ் தொற்று காணப்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்ப்பாணத்திற்கு வெங்காயம் வாங்க வந்தவர்களிற்கு நேர்ந்த கதி
Previous articleமுன்னாள் ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் அவரது மகன் கொரோனாவுக்கு பலி!
Next articleநீண்ட நாட்களுக்கு நாடு முடுக்கப்பட்டால் நாட்டில் அனைவரும் அர்ப்பணிப்பு செய்ய தயாராக வேண்டும்; ஜனாதிபதி!