Home Local news லிட்ரோவின் விலையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது: இல்லாவிட்டால் அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள்! ­நுகர்வோர் அதிகார சபை கூறுகிறது

லிட்ரோவின் விலையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது: இல்லாவிட்டால் அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள்! ­நுகர்வோர் அதிகார சபை கூறுகிறது

லாப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு நிகராக லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ நிறுவனம் கோரியுள்ளது. அதன் பிரகாரம் விரைவில் விலை அதிகரிப்பு மேற்கொள்ள வேண்டிவரும். இல்லாவிட்டால் வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டிவரும் என நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன தெரிவித்தார்.

லிட்ரோ காஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு தெரிவித்து விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், லாப் நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு நிகராக லிட்ரோவின் விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ நிறுவனம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் பிரகாரம் இன்னும் சில தினங்களில் லாப் காஸ் சிலிண்டரின் விலைக்கு நிகராக லிட்ரோ காஸ் சிலிண்டரின் விலையையும் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கவேண்டியுள்ளது.

ஏனெனில் லிட்ரோ நிறுவனம் கோரியிருக்கும் விலை அதிகரிப்பை நுகர்வோர் அதிகாரசபை வழங்காமல் இருந்தால் அவர்கள் நுகர்வோர் அதிகார சபைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு இடமுள்ளது.

எனவே லாப் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ரோ 12.5கிலோ கிராம் சிலிண்டர் ஒன்றை 363 ரூபாவினாலும் 5கிலோ கிராம் கொண்ட சிலிண்டரின் விலையை 145ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளோம். இன்னும் சில தினங்களில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்றார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தொண்டமானாறில் சிக்கிய பெருந்தொகை கஞ்சா!
Previous articleடிக்கோயாவில் நான்கு வைத்தியர்களுக்கு தொற்று
Next articleபோலி ஆவணம் தயாரித்த இளைஞர் கைது!