Home Local news டிக்கோயாவில் நான்கு வைத்தியர்களுக்கு தொற்று

டிக்கோயாவில் நான்கு வைத்தியர்களுக்கு தொற்று

டிக்கோயா  ஆதார  வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலை ஊழியர்கள் 07 பேர்,தாதியர்கள் 06 பேர் மற்றும் 04 வைத்தியர்கள் என  17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வைத்தியசாலையில், கொரோனா தொற்று நோயாளர் வார்ட்டில் அதிகளவான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன்,   வைத்திய சேவை  நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொற்றுக்குள்ளான 17 பேரும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களோடு தொடர்பினை  பேணியவர்களை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொது சுகாதர அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் தபால் சேவை.
Previous articleமரண எண்ணிக்கையை வரையறுப்பதே எங்களது பிரதான இலக்கு – சவேந்திர சில்வா
Next articleலிட்ரோவின் விலையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது: இல்லாவிட்டால் அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள்! ­நுகர்வோர் அதிகார சபை கூறுகிறது