Home Local news தடையை மீறி திருமணம்; தடுத்த அதிகாரிகள்

தடையை மீறி திருமணம்; தடுத்த அதிகாரிகள்

பொகவந்தலாவ  – ஆரியபுர பகுதியிலுள்ள திருமண மண்டபமொன்றில், சுகாதார விதிமுறைகளை மீறி, இடம்பெறவிருந்த திருமண நிகழ்வொன்று, பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால், இன்று (20) காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தீவிரமடைந்து வரும் கொரோனா மற்றும் டெல்டா தொற்று காரணமாக,  திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில், சுகாதார முறையினை மீறி இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதில் சுமார் 25கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும்  சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த திருமண மண்டபத்துக்கு விரைந்த பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார், அங்கு கூடியிருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றியுள்ளனர்.

அத்துடன், மண்மகன், மணமகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் மாத்திரம் திருமணத்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த திருமண மண்டபத்தின் உரிமையாளரும் பொலிஸ்
நிலையத்துக்கு  அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  Laugfs சமையல் எரிவாயுவின் விலை 1,856 ரூபாவாக அதிகரிப்பு!
Previous articleஇரத்தினக் கற்கல் திருட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
Next articleநாட்டை முடக்க வேண்டாம்; பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதிக்கு கடிதம்!