Home Local news சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை

சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை

ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (19) லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர்.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

 சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மைஇதனால் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு எரிவாயு கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் குறித்த விற்பனை நிலையத்தில் இன்று விற்கப்படுவதாக அறிந்த நுகர்வோரே இவ்வாறு கூடியிருந்தனர்.

எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட 75 சிலிண்டர்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாக கேஸ் விற்பனையாளர் கூறினார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  3 வாரங்களுக்காவது நாடு முடக்கப்பட வேண்டும்; விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க.
Previous articleஎரிக்கப் பணமில்லை என்றால் சொந்த நிதியை தருகிறேன்; அமைச்சர் ஜனக பண்டார.
Next articleயாழ்ப்பாணத்தில் மேலும் ஐவரை காவு கொண்டது கொரோனா