Home Local news கல்முனை சுகாதார பிராந்தியத்தில் மரண எண்ணிக்கை 116 ஆக உயர்வு! தொற்றுக்குள்ளானோர் 5,385 ஆக அதிகரிப்பு

கல்முனை சுகாதார பிராந்தியத்தில் மரண எண்ணிக்கை 116 ஆக உயர்வு! தொற்றுக்குள்ளானோர் 5,385 ஆக அதிகரிப்பு

கல்முனைப் பிராந்தியத்தில் இன்று (19) மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்வாகப் பிரிவில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று முற்பகல் 10.00 மணிவரையான 24 மணித்தியாலயத்தில் 72 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் ஆகக்கூடிய தொற்றாளர்களாக பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேற்படி காலப்பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இப்பிராந்தியத்தில் நால்வர் உயிரிழந்திருக்கின்றனர்.

நிந்தவூர் சுகாதார பிரிவைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவரும் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த 73 வயது ஆண் ஒருவரும் இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த 71 வயது ஆண் ஒருவரும் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 79 வயது ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5,385 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் தற்போது 1,036 பேர் வைத்தியசாலைகளிலும் கொவிட்-19 சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 3,825 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

READ MORE >>>  மட்டக்களப்பு - கல்முனை வீதியில் இரு பஸ்கள் விபத்து

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleஅரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு சம்பந்தன் எடுத்துரைப்பு!
Next articleஇலங்கையில் கொரோனா அச்சத்தால் செத்துப்போன மனிதநேயம்!