Home Uncategorized ‘வைத்தியசாலைகளுக்கு உதவி கரம் நீட்டுங்கள்’: வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடம் சுதர்ஷனி வேண்டுக்கோள்

‘வைத்தியசாலைகளுக்கு உதவி கரம் நீட்டுங்கள்’: வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடம் சுதர்ஷனி வேண்டுக்கோள்

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டுவாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள சிங்கள வானொலி ஒன்றுடனான உரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது  அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டின் வைத்தியசாலைகளில்  வைத்திய  உபகரணங்கள் பற்றாக்குறை  நிலவுவதால் அவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். மேலும், ஒட்சிசன் தட்டுப்பாடும் நிலவுகிறது. இவற்றை பெற்றுக்கொடுக்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்  அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதேவேளை, மூன்று இலட்சத்து அறுபது ஆயிரம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மாணவனையும் தாயையும் தாக்கிய அதிபர் மீது தாக்குதல்
Previous articleசதொச ஊடாக அத்தியாவசிய 20 பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி: வீடுகளுக்கும் கொண்டுவந்து கொடுக்கப்படும்.
Next articleயாழ் சாரதிகளுக்கான அறிவித்தல்