Home Local news த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் நேற்று(18)  காலமானார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர்  ,மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்றுக் காலை  உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் குறித்த கட்சியின்  மகளிர் அணியைக் கட்டியமைப்பதில் பாரிய பங்காற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கைதிகளின் விடுதலை தொடர்பில் மகஜர்
Previous articleமீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நித்யானந்தா!
Next articleஇலங்கை மொடல் அழகி ஹாஷினியின் சூடேற்றும் படங்கள்