Home Local news முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 11 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அக்கராயன் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படவுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார்  மேறக்கொண்ட நடவடிக்கையின் போதே, சந்தேக நபர், முதிரை மரக் குற்றிகளுடன் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தொலைபேசியால் வந்த வினை!! மாணவர்களான காதல் ஜோடி ஒன்றின் அந்தரங்கம் காற்றில்
Previous articleபுதுக்குடியிருப்பை பூட்ட தீர்மானம்.
Next articleமீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நித்யானந்தா!