Home Local news புதுக்குடியிருப்பை பூட்ட தீர்மானம்.

புதுக்குடியிருப்பை பூட்ட தீர்மானம்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்த நிலையங்களை, சனிக்கிழமை (21)  தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (27) அதிகாலை வரை பூட்டுவதற்கு, புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கம், இன்று (19) தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த நாள்களில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மருந்தகங்கள், டயர் ஒட்டுக்கடைகள் என்பன மாத்திரம் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டோ சங்க நிர்வாகம், சிகை அலங்கரிப்பு சங்க நிர்வாகம் என்பனவும், இந்த வர்த்தக சங்கத்தின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு, அதற்கான ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர் நீதன் தெரிவித்தார்.

எனவே,  புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட மக்கள், தங்களுக்கு தேவையான உணவு பொருள்களை கொள்வனவு செய்துகொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த அறிவித்தலை மதிக்காது வர்த்தக நிலையங்களை யாராவது திறந்தால், புதுக்குடியிருப்பு சுகாதாரப் பிரிவினரின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், அவர்களும் அவர்களது வர்த்தக நிலையங்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அன்டிஜன் பரிசோதனையும் பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இனந்தெரியாதோரால் குடிசை ஒன்றுக்கு தீ வைப்பு, ஒருவர் பலி - திருமலையில் சம்பவம்
Previous articleவிறகு வெட்டிக் கொண்டிருந்தவர் திடீரென மரணம்; முல்லைத்தீவில் சம்பவம்.
Next articleமுதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!