Home Local news மூன்று வாரம் நாட்டை முடக்குங்கள்! முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மூன்று வாரம் நாட்டை முடக்குங்கள்! முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

குறைந்தபட்டம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியும் அளவிற்கு குறைக்க முடியாது என்று நம்புவதாகவும் அவர்கள் அந் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நமது இடசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, ஜாதிக நிதாஸ் பெரமுனவின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில,

ஐக்கிய தேசிய மக்கள் கட்சியன் தலைவர் திரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர் ஜி.வீரசிங்க, இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் கடமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவர் தலைவர் கெவிது குமாரங்க மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்
Previous articleகோவிட் தொற்றுக்கு இலக்கானோரை சிகிச்சைக்கு உட்படுத்த இன்று முதல் புதிய முறைமை
Next articleபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!