Home Local news 311 படுக்கைகள் கொண்ட புதிய கொவிட் சிகிச்சை பராமரிப்பு நிலையம்.

311 படுக்கைகள் கொண்ட புதிய கொவிட் சிகிச்சை பராமரிப்பு நிலையம்.

குறித்த பகுதியில் கொவிட் – 19 நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் மத்திய பாதுகாப்பு தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் விகும் லியனகேவினால் சுகாதார அதிகாரிகளிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 311 நோயாளர்களை பராமரிப்பதற்கான சகல மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு நிலையத்திற்கு தேவையான கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகள் ஆகியவை கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமாக ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் வழங்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படை வீரர்களினால் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாரும் சொல்லவுமில்லை.. தூண்டவுமில்லை, நானாக ஏறிப் போராடினேன்!
Previous articleகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 27 டாக்டர்கள், 105 தாதியர் உட்பட 265 பேருக்கு கொவிட் -19
Next articleஇராணுவத்தினரால் புனரமைக்கப்படும் வீதி!