Home Local news கொரோனா தொற்றியவர் வீட்டிலேயே மரணம்.

கொரோனா தொற்றியவர் வீட்டிலேயே மரணம்.

பண்டாரவளை, கஹத்தேவெல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 62 வயதான நபரொருவர், தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், மூன்று நாள்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் (17) காலை உயிரிழந்தார்.

இதேவேளை, பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிய தொற்றாளர்கள் 59 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதில், 37 பேர் உடனடி அன்டிஜன் பரிசோதனையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதித்து ஏனையவர்களை வீட்டினுள் தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க பண்டாரவளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இலங்கையை வந்தடைந்து மேலும் 728000 அஸ்ராஸெனகா தடுப்பூசிகள்;
Previous articleசர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கோவிட் தரவுகள்! – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
Next articleவீட்டுக்கே மருந்துகளை வரவழைக்க விசேட இலக்கம் அறிமுகம்!