Home Local news போலி கொவிஷீல்ட் தடுப்பூசிகள்; உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

போலி கொவிஷீல்ட் தடுப்பூசிகள்; உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

இந்தியா மற்றும் ஆபிரிக்காவில் போலி கொவிஷீல்ட் தடுப்பூசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிரதான கொவிட்19 தடுப்பூசியாக கொவிஷீல்ட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா மற்றும் ஆபிரிக்காவில் போலி கொவிட்19 தடுப்பூசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட தடுப்புமருந்துகள் போலியானவை என கொவிட்ஷீல்ட் தடுப்புமருந்தை தயாரிக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இத்தடுப்புமருந்து மக்களின் ஆரோக்கியத்துக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன், அவற்றை விநியோகத்திலிருந்து அகற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளது

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி!
Previous articleகொவிட் மரணங்கள் 170 ஆக உயர்வு; இதுவரை 6604 மரணங்கள் பதிவு.
Next articleயாழில் இளம் ஆசிரியரின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்!