Home Local news அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு;

அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு;

நாவலப்பிட்டி நகர மத்தியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி கட்டடத்துக்கு முன்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (18) மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தார்.

சுமார் 60 வயது மதிக்கதக்க ஒருவரின் சடலம் காணப்படுவதாக, நாவலப்பிட்டி நகரசபை பணியாளர்களால் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த திடீர் மரண விசாரணை அதிகாரியான மல்லிகா ஹேவாவிதாரண, இறந்தவர் தொடர்பாக பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, சடலத்தை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன்,  நாவலப்பிட்டி நகர சபை பணியாளர்களால் குறித்த வர்த்தக நிலையக் கட்டடம் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மீனவர்கள் இருவருக்கு எதிராக வழக்கு!
Previous articleகொரோனாவால் மரணித்தவர்களுக்கு இலவச சவப்பெட்டிகள்!
Next articleகொவிட் மரணங்கள் 170 ஆக உயர்வு; இதுவரை 6604 மரணங்கள் பதிவு.