Home Local news ராகமையில் கண்கலங்கச் செய்த சம்பவம்!

ராகமையில் கண்கலங்கச் செய்த சம்பவம்!

ராகம வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்களில் ஒருவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சைப்பெற்றுவந்த வைத்தியர், இன்று (18) காலை மரணமடைந்துவிட்டார்.

ராகம வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை பிரிவில் கடமையாற்றிய 34 வயதான வைத்தியரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேற்படி வைத்தியர், ராகம வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சைப்பெற்றுவந்தார். அதன்பின்னர், அவசர சிகிச்சைப் ​பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு வாரங்கள் அங்கு சிகிச்சைப்பெற்றுவந்தார்.

இன்றுக்காலை மரணமடைந்த அந்த வைத்தியர், கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக்கொள்ளாத ஒருவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மரணங்கள்!
Previous articleபிணவறைகள் நிரம்பின: டயர்களை போட்டு எரிக்க முடிவு!
Next articleபொருள்களை சேமித்து கொள்ளுமாறு எச்சரிக்கை!