Home Indian news ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு; 1500 ஊசிகள்; கணவன் மீது மனைவி புகார்:

ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு; 1500 ஊசிகள்; கணவன் மீது மனைவி புகார்:

தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 8 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாககவும் ஆண் குழந்தைக்கான சிகிச்சையின் போது கிட்டத்தட்ட 1500 ஸ்டீரோய்ட் (steroid injections) மற்றும் ஹோர்மோன் ஊசிகள் (Hormone injections) செலுத்தப்பட்டதாகவும் வழக்கறிஞரான தனது கணவர் மீது அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் அளித்திருக்கும் புகார் இந்திய மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையின் தாதர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு வழக்கறிஞர் ஒருவருடன் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. பெண்ணின் கணவருடைய குடும்பத்தினர் நன்கு படித்தவர்கள். அப்பெண்ணின் மாமியார் கூட ஒரு வழக்கறிஞர் தான். கணவருடைய சகோதரி மருத்துவராக உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் அத்தம்பதியருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆனால், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என அப்பெண்ணின் கணவர் கண்டிப்புடன் கூறி வந்திருக்கிறார். குடும்பத்தினையும், குடும்ப சொத்துக்களையும் பாதுகாக்க தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என கேட்ட கணவர், அந்த பெண் 2011இல் மீண்டும் கர்ப்பமடைந்த போது கருவில் இருப்பது பெண் என அறிந்து மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்திருக்கிறார்.

இதன் பின்னர் தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய வைத்த கணவர், அவரின் மனைவியை ஆண் குழந்தை பெற்றெடுக்கும் நோக்கில் மருத்துவ சிகிச்சை பெற வைத்திருக்கிறார். இதன் பின்னர் தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கிற்கு அழைத்துச் சென்று அங்கு சில நவீன சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சைகளையும் செய்ய வைத்திருக்கிறார். இந்த சிகிச்சையின் போது கிட்டத்தட்ட 1500 ஸ்டீராய்ட் மற்றும் ஹோர்மோன் ஊசிகள் அப்பெண்ணுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.

READ MORE >>>  தான் நலமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டார்; அஜித் ரோஹண!

இது போன்ற சிகிச்சை முறைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதால் அவர் மனைவியை பாங்காக்கிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆண் குழந்தைக்காக கணவர் செய்த கொடுமைகளை தாங்க முடியாத அவரது மனைவி இது தொடர்பாக தற்போது காவல்நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்திருக்கிறார்.

ஆண் குழந்தைக்காக இந்த நவீன காலத்தில், நவீன முறையில் பெண்களை கொடுமைப்படுத்தும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleஹட்டன் நகரையும் முடக்கத் தீர்மானம்.
Next articleஇந்தியாவிலேயே விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகர்!