Home Indian news 3 மாத பெண் குழந்தை வல்லுறவால் கவலைக்கிடம்: 17 வயது சிறுவனை தேடும் பொலிஸார்;

3 மாத பெண் குழந்தை வல்லுறவால் கவலைக்கிடம்: 17 வயது சிறுவனை தேடும் பொலிஸார்;

இந்திய உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 3 மாத பெண் குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் உள்ள பல்வாலா பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 3 மாத பெண் குழந்தையினுடைய தாய், அவர் வீட்டில் வளர்த்து வரும் எருமை மாடுகளை கட்டி வைப்பதற்காக சென்றிருந்த போது, வீட்டில் ஆள் இல்லாத அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் அக்குழந்தையை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தனது வேலையை முடித்துக் கொண்டு அக்குழந்தையின் தாயார் வீட்டுக்கு திரும்பிய போது தன்னுடைய குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டுள்ளார். அப்போது அந்த 17 வயது சிறுவன் குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்துள்ளான். குழந்தை சிறுநீர் கழித்துவிட்டாள் என கூறிய அச்சிறுவன் தாயார் வந்ததும் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான்.

ஆனால் குழந்தையினுடைய பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வந்ததை பார்த்த அவருடைய தாயார், குழந்தைக்கு நடந்த விபரீதத்தை யூகித்துக் கொண்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு தனது குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். ஆகினும், குழந்தை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கவே, சிறுவன் மீது பொலிஸார் பாலியல் வல்லுறவு, போஸ்கோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் பொலிஸார் தேடுவதை அறிந்து சிறுவனும் தலைமறைவாகிவிட்டான். அவனை தேடுவதற்காக 4 சிறப்பு குழுக்களை பொலிஸார் அமைத்துள்ளது.

READ MORE >>>  மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் ஒட்சிசன் சிலிண்டர்கள் வழங்கிவைப்பு!

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டெல்லியில் 9 வயது தலித் சிறுமி ஒருவர் பூசாரி உள்ளிட்ட நால்வரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleஇணையத்தளத்தில் விறகு விற்பனையால் பரபரப்பு!
Next articleஹட்டன் நகரையும் முடக்கத் தீர்மானம்.