Home Lifestyle இணையத்தளத்தில் விறகு விற்பனையால் பரபரப்பு!

இணையத்தளத்தில் விறகு விற்பனையால் பரபரப்பு!

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணத்தினால் இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு வர்த்தகத்தை முன்னெடுக்கும் இலங்கையின் பிரபல்ய நிறுவனமொன்றில் 5 கிலோ கிராம் விறகுகள் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் ஒரு மண் அடுப்பும் 5 கிலோ கிராம் விறகுகளும் 390 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாத இணையத்தளத்தின் தலைவர் தனது முகநூல் பக்கத்தில், “நாங்கள் விறகுகளை ஒன்லைனில் விற்பனை செய்வோம் என்று கற்பனை கூட செய்யவில்லை. இது உண்மையில் வெற்றியளித்துள்ளதாக கூறியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  விசேட அறிவிப்புக்கு தயாராகும் ஜனாதிபதி!
Previous articleநாட்டை முடக்குவதற்கு அரசு அஞ்சுகிறதா? உப தவிசாளர் துரைநாயகம் கேள்வி.
Next article3 மாத பெண் குழந்தை வல்லுறவால் கவலைக்கிடம்: 17 வயது சிறுவனை தேடும் பொலிஸார்;