Home Local news வவுனியாவில் திடீரென மயங்கி விழுந்தவர் சாவு

வவுனியாவில் திடீரென மயங்கி விழுந்தவர் சாவு

வவுனியா ஓமந்தை பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் சாவடைந்துள்ளார்.

குறித்த நபர் இன்று காலை ஓமந்தை பாலமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீர் என மயங்கி விழுந்துள்ளார்.

எனினும் அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

சம்பவத்தில் வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியை செர்ந்த சதாசிவம் ரவிக்குமார் என்ற 54 வயதான குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட றபிட் அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆயினும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திருகோணமலையில் கைக்குண்டுகள் மீட்பு
Previous articleவவுனியாவில் கணவன், மனைவி கொரோனாவிற்கு பலி
Next articleகோயிலிற்குள் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அர்ச்சகரிற்கு விளக்கமறியல்