Home Local news மன்னாரில் மேலுமொரு கொரோனா மரணம்

மன்னாரில் மேலுமொரு கொரோனா மரணம்

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை(17) மாலை மேலும் ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் இன்று (17) மாலை மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மன்னார் மூர்வீதி பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வயோதிபர் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக உயிரிழந்த 3 வயோதிபர்களும் எவ்வித கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் இந்த மாதம் தற்போது வரை 246 கொரோனா தொற்றாளர்களும், இவ்வருடம் 1270 தொற்றாளர்களும், மாவட்டத்தில் இதுவரை 1287 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வவுனியாவில் மேலும் ஐந்து பேர் கோவிட் தொற்றுக்கு பலி
Previous articleமன்னாரில் வீடு புகுந்து தாக்கியவர் கைது
Next articleவவுனியாவில் கணவன், மனைவி கொரோனாவிற்கு பலி