Home Local news பணியாற்றிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்.

பணியாற்றிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்.

வவுனியா ஓமந்தை பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என மயங்கி விழுந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த நபர் இன்று காலை ஓமந்தை பாலமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீர் என மயங்கி விழுந்துள்ளார்.

எனினும் அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ரவிக்குமார் என்ற 54 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

Mortician covering dead body in morgue

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட றபிட் அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆயினும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா!! தபால்மூலம் மருந்தினை பெறுமாறு கோரிக்கை
Previous articleஅரசாங்கத்தின் அதிமேதாவித்தனமே இந்த நிலைக்கு காரணம்; விஜித ஹேரத்.
Next articleசட்டத்தரணிகள் சம்மேளனம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!