Home Local news ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய ரணில்; நாட்டை காப்பாற்றுமாறும் கோரிக்கை!

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய ரணில்; நாட்டை காப்பாற்றுமாறும் கோரிக்கை!

கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலத்தில்  இன்று (17) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பித்த இந்த கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றுள்ளது.

கொவிட் -19 உயிரிழப்புகளை குறைத்தல் மற்றும் தொற்று ஏற்படுவதை முழுமையாக கட்டுப்படுத்தலுக்காக எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய விடாது மீட்டெடுத்தல் போன்றவை குறித்து அவசரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார். இதனை மையப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி கடந்த வாரத்தில் வெளியிட்ட திட்ட வரைபை செயற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!
Previous articleஉங்கள் Smartphone-ல் இந்த 8 Apps இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள்! கூகுள் எச்சரிக்கை
Next articleஅதிரடிப்படையினரால் அழிக்கப்பட்ட 6 ஏக்கர் கஞ்சாசேனை!