Home Accident News விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு வயிற்றில் சத்திரசிகிச்சை; வெளியாகியுள்ள அதிர்ச்சி வீடியோ!

விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு வயிற்றில் சத்திரசிகிச்சை; வெளியாகியுள்ள அதிர்ச்சி வீடியோ!

கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், வயிற்றில் தையல்களுடன் மருத்துவமனையில் இருந்து  முதல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் தன் தோழி பவானி, நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் டின்னருக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார். அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானதில் பவானி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. யாஷிகா தன் காலில் பெரிய கட்டுடன் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வரைலானது. இந்நிலையில் விபத்தால் ஏற்பட்ட காயத்திற்கு போடப்பட்ட தையல்களை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் யாசிகாவின் வயிற்றில் இருக்கும் தையல்கள் தெரிகிறது. அதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாஷிகாவுக்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த அளவுக்கு என்று தெரியாமல் போய்விட்டது.

யாஷிகா எப்படி எல்லாம் வலியில் துடிக்கிறாரோ என்கிறார்கள் ரசிகர்கள். முன்னதாக தன் உடல்நலம் குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் யாஷிகா.

இன்னும் 5 முதல் 6 மாதங்களுக்கு தன்னால் எழுந்து நடக்க முடியாது என்றும், படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும் என்றும் யாஷிகா தெரிவித்தார். பவானி இறந்து, தான் உயிர் வாழ்வது குற்ற உணர்ச்சியாக இருப்பதாகக் கூறி வேதனைப்பட்டார் யாஷிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 

Yashika Anand on Twitter: "Good evening 💣 https://t.co/wvQVQYRT2f" / Twitter

Yashika Anand on Twitter: "A lion doesn't loose his sleep over the opinion of a sheep 🦁 ♌️ ♥️… "

Dude on Twitter: "Yashika Anand… "

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  டிப்பர் – கார் விபத்தில் சிறுவர்கள் இருவர் பலி; தந்தை படுகாயம்
Previous article500 கட்டில்கள் 1000 கொவிட் நோயாளிகள்; கதிகலங்கிடும் கல்முனை!
Next articleஒரேயொரு கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதால் முழுமையாக முடக்கப்படும் நாடு