Home Accident News கடைக்குள் புகுந்த கனரக வாகனம்; கல்முனையில் சம்பவம்.

கடைக்குள் புகுந்த கனரக வாகனம்; கல்முனையில் சம்பவம்.

கல்முனையிலிருந்து இன்று (17)அதிகாலை அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கனரக வாகனமொன்று  வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை  விட்டு விலகி கடையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அருகாமையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனவும், கடையின் முன்புறம் மற்றும் அருகிலிருந்த மின்கம்பம் ஆகியன சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த  மேலதிக விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இன்று முதல் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்லலாம்; இராணுவ தளபதி.
Previous articleஉங்க செல்போன் பேட்டரி சார்ஜ் தீராமல் இருக்க என்ன செய்யனும் தெரியுமா?
Next articleபண்டாரவளை நகரமும் மூடப்படுகிறது.