Home Local news ஒரு மாதத்திற்கு முழுமையான ஊரடங்கு?

ஒரு மாதத்திற்கு முழுமையான ஊரடங்கு?

நாடளாவிய ரீதியில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு சட்டம், 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாள்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர், அந்த ஊரடங்கு உத்தரவை ஒரு மாதத்துக்கு முழுமையாக   பிறப்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்​போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருதல். தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இவற்றை கருத்தில் கொண்டும், சுகாதார வழிமுறைகளை பலரும் முறையாக பின்பற்றாமையை கவனத்தில் கொண்டுமே இவ்வாறு ஊரடங்கை நீடிப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதா அல்லது முழுமையான முடக்கத்துக்குச் செல்வதா? என்பது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எவையும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொரோனாவால் மொட்டிலேயே கருகிய சிசு.. கண்ணீருடன் ஒரு உண்மைச் சம்பவம்.
Previous articleகோட்டா-ரணில் சந்திப்பு!
Next articleகொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் நபர்!