Home Local news திருகோணமலை நகரப் பகுதிகளிலும் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்!

திருகோணமலை நகரப் பகுதிகளிலும் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்!

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா சடுதியாக அதிகரித்திருப்பதை கருத்தில்கொண்டு திருமலை நகரப் பகுதியில் இன்று (17) முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று (17) திருகோணமலை நகர சபையில் இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய இன்று (17) செவ்வாய்க்கிழமை முதல் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானித்திருப்பதாக திருகோணமலை நகரசபை தலைவர் என்.இராசநாயகம் தெரிவித்தார்.

மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுகடைகள் திறக்கப்பட்டிருக்கும் எனவும் நடமாடும் சேவைகள் மூலம் மீன் மற்றும் மரக்கறி வகைகளை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

குறித்த சந்திப்பில் திருகோணமலை நகர சபை தலைவர் என்.ராஜநாயகம், பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் சதுன் தர்ஷன ரத்னாயக்க, திருகோணமலை வர்த்தக சம்மேளன தலைவர் கே.குலதீபன் மற்றும் ஷிரோமன் ரங்கன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நீர்வீழ்ச்சி நிர்வாண கானொளி விவகாரம் இவர்கள்தானாம்!
Previous articleஇலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு போதாது.
Next articleகோட்டா-ரணில் சந்திப்பு!