Home jaffna news யாழ். பருத்தித்துறையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது.

யாழ். பருத்தித்துறையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது.

யாழ். பருத்தித்துறை சுப்பர் மட பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த 78 வயதான வைரவ நாகரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சுப்பர் மட பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த நபர் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராஜ கிராமம் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த நபர் நேற்றைய தினம் இரவு அவ்விடத்திலிருந்து சத்தமாக பாடல்களை பாடிக்கொண்டு இருந்ததாகவும், காலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மிரட்டலை மீறி அன்னை பூபதிக்கு அஞ்சலி
Previous articleசிவப்பு பட்டியலில் இலங்கை; மாதத்திற்கு 5000 மரணங்கள் பதிவாகலாம்!
Next articleஇலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு போதாது.