Home Local news பேய் விரட்டியவர்களை விரட்டிப் பிடித்து தனிமைப்படுத்திய பொலிசார்.

பேய் விரட்டியவர்களை விரட்டிப் பிடித்து தனிமைப்படுத்திய பொலிசார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடொன்றில் `பேய் விரட்டும்` சடங்குகளை செய்த சாமியார் உள்ளிட்ட 10 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை – மாயாதுன்ன பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டதிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்கியுள்ளதோடு, சாமியார் உள்ளிட்ட 10 பேரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

14 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் அம்பாறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பொலிஸ் உத்தியோகஸ்தர் குத்தி கொலை!! இளைஞன் கைது
Previous articleகிரிபத்கொடையில் பாரிய தீ; 12 பேரை மீட்க கடும் முயற்சி.
Next articleசிவப்பு பட்டியலில் இலங்கை; மாதத்திற்கு 5000 மரணங்கள் பதிவாகலாம்!