Home CRIME NEWS குடும்பத் தகராறு கத்திக் குத்தில் முடிந்தது; இளம் தந்தை பலி.

குடும்பத் தகராறு கத்திக் குத்தில் முடிந்தது; இளம் தந்தை பலி.

குடும்பத் தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் இன்று (17) அதிகாலை 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் உடன் அறிவிக்கவும்
Previous articleநான் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன்! – பெண் ஒருவரின் உருக்கமான கருத்து
Next articleஇரத்தினபுரி நகரம் 15 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.