Home Local news மகிந்தவை வெளுத்துவாங்கிய தேரர்; வைரலாகும் காணெளி!

மகிந்தவை வெளுத்துவாங்கிய தேரர்; வைரலாகும் காணெளி!

இலங்கை வரலாற்றில் ஒரு பயனற்ற ஆட்சியாளராக மஹிந்த ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பிடிப்பதை தடுக்க யாராலும் முடியாது என தேரரொருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கோவிட் தொற்று பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேரரொருவர் கருத்து வெளியிட்டுள்ள காணொளியொன்று தற்போது வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் தேரர் இவ்வாறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.அவை பின்வருமாறு,

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.அதற்காக இந்நாட்டு மக்கள் மதித்தார்கள்,அன்பு செலுத்தினார்கள்,கௌரவமாக கவனித்தார்கள்.ஆனாலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது மாத்திரமே.அதுவும் தானாக தான் நடந்தது என்பதை நான் உறுதியாக சொல்கின்றேன்.

எப்போது பேசினாலும் நீங்கள் யுத்தத்தை முடித்ததை மட்டுமே சொல்கின்றீர்கள்.நாடு முழுவதும் அபிவிருத்தி செய்ததாக சொல்கின்றீர்கள். ஆனால் உலகத்தில் பல நாடுகளிடம் கடன் வாங்கி இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் உலகிற்கு கடன்காரர்களாக்கி தான் நாட்டை அபிவிருத்தி செய்துள்ளீர்கள்.

நாட்டின் வளங்கள் இன்று நாட்டில் எங்குமே இல்லை.நாட்டில் அனைத்து வளங்களையும் கொள்ளையடித்து இந்த நாட்டை நாசம் செய்துவிட்டீர்கள். இன்று இப்படி பேசும் நான் நாளைக்கு உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது.

கொடிய கோவிட் இன்று முழு நாட்டையும் பலியெடுத்துக்கொண்டு உள்ளது. கோவிட் என்பதும் இவர்களுடைய ஒரு வியாபாரம் தான்.இந்த நாட்டில் கோவிட் என்று ஒன்று இருக்கவில்லை. பசில் யுக்ரேனில் இருந்து சிலரை அழைத்து வந்து கோவிட் தொற்றை பரப்பினார்.

இந்தியாவில் மக்கள் இறக்கும் போது நாட்டை விட்டு தப்பிய இந்தியர்களை தனிமைப்படுத்துவதாக இங்கு அழைத்து வந்து டெல்டா உட்பட அனைத்து திரிபுகளையும் இலங்கைக்குள் பரப்பினார்கள். யுக்ரேனில் இருந்து புது திரிபுகளை கொண்டு வந்தார்கள். இவர்களின் பாவங்களை தான் இன்று அப்பாவி மக்கள் அனுபவிக்கின்றார்கள்.

READ MORE >>>  இலங்கையில் பரவும் புதிய வகை கொரோனா; மக்களே எச்சரிக்கை..! எப்படி பரவியது??

நாளாந்தம் மக்கள் இறக்கின்றார்கள் , ஒரு மணித்தியாலத்திற்கு 5 பேர் வீதம் இறக்கின்றனர். 100,150 மரணங்கள் நெருங்கி உள்ளது. 2500,3000 என தொற்றாளர்கள் அதிகரிக்கின்றார்கள். அன்று முதல் யுத்தம் செய்தாலும்,செய்யாவிட்டாலும் மக்கள் முகம்கொடுத்த துன்பங்கள் குறையவில்லை.

ஈஸ்டர் தாக்குதலில் கூட இவ்வளவு பேர் இறக்கவில்லை. ஆனால் இன்று 5000ஐ தாண்டி உயிரிழந்துள்ளார்கள். நாட்டை மூட வேண்டிய நேரத்தில் மூடவில்லை. இப்பொழுது மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இன்று மக்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் உள்ளது.

உடைகள் அணிய ஒரு வழி இல்லை.மக்கள் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளார்கள்.இந்த நேரத்தில் நாட்டை மூட வேண்டாம்.இப்பொழுது மக்களுக்கு இருந்தாலும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று.

ஒட்சிசன் இல்லாமல் இறந்தாலும் ஒன்று. உன்ன உணவு இல்லாமல் இருந்தாலும் ஒன்று.அந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleஒட்சிசனை எடுக்க இந்தியாவை நோக்கி விரையும் கப்பல்
Next articleவவுனியாவில் மேலும் 59 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.