Home Local news ஒட்சிசனை எடுக்க இந்தியாவை நோக்கி விரையும் கப்பல்

ஒட்சிசனை எடுக்க இந்தியாவை நோக்கி விரையும் கப்பல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒட்சிசனை எடுத்துச் செல்வதற்காக, இலங்கை கடற்படை கப்பல் “சக்தி” இன்று சென்னைக்குப் பயணிக்க இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, மருத்துவமனைகளில் பற்றாக்குறையைச் சமாளிக்க 100 மெட்ரிக் டன் மருத்துவ தர ஒட்சிசனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய உள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

கொழும்பிலிருந்து புறப்படும் கப்பல், சென்னை துறைமுகத்தை அடைய 36 மணி நேரம் ஆகும் என்று இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் “சக்தி” கப்பல் என்பது இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கணவன், பிள்ளைகளை பறிகொடுத்த பெண் மொட்டையடித்து அஞ்சலி: உருக வைக்கும் பதிவு!
Previous articleநேற்றைய கொவிட் மரணங்கள் 167; இதுவரை 6263.
Next articleமகிந்தவை வெளுத்துவாங்கிய தேரர்; வைரலாகும் காணெளி!