Home Local news இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம்:

இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம்:

இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் குருதி உறைதல் தொடர்பான பரிசோதனையை செய்து, அந்த பரிசோதனை அறிக்கையை வைத்தியரிடம் காண்பித்து அவர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது சிறந்ததாகும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சம்பத் விதானவசம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இதய நோயாளர்களில் பெரும்பாலானோர் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்பவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறான நோயாளர்கள் தற்போது கொவிட் தொற்றின் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே இவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும் சிகிச்சைகளையும் கைவிடக் கூடாது.

தற்போது மருந்துகளை பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் காணப்பட்டாலும் எவ்வழியிலேனும், நோயாளர் அல்லாத ஆனால் அவருடன் தொடர்புடையவர்கள் ஊடாகவேனும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கொவிட் தொற்றுக்கு உள்ளானாலும் மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொள்வதில் எவ்வித சிக்கலும் இல்லை.

இதய நோயால் ஏற்படக் கூடிய மரணங்களைத் தவிர்த்துக் கொள்ள மருந்துகள் அத்தியாவசியமானதாகும். தற்போது  பெரும்பாலான இதய நோயாளிகள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள பின்வாங்குகின்றனர். ஆனால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக பாதுகாப்பாகும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியாவுடன் கொவிட் தொற்றும் ஏற்பட்டால் நிலைமை பாரதூரமானதாகும். எனவே முச்சுத்திணறல், நெஞ்சுவலி உள்ளிட்ட ஏதேனும் வழமைக்கு மாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். எது எவ்வாறிருப்பினும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகாமல் தம்மை பாதுகாத்துக் கொள்வதே அனைத்தையும் விட முக்கியமாகும் என்றார்.

READ MORE >>>  நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்!

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleசிறுநீரக நோயாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
Next articleஉங்க கணவர் உங்கள விவாகரத்து பண்ணிட்டு போகும்போது… நீங்க என்ன செய்யணும் தெரியுமா?