Home Local news கிண்ணியாவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

கிண்ணியாவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணியில் தானியார் காணி ஒன்றில் இன்று (16)காலை 9.30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

 

தானியார் காணி ஒன்றில் குழி வெட்டும் போது அக்குழியிலிருந்து பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது

தனியார் ஒருவருக்குச் சொந்தமான பத்தரகாளியம்மன் கோயில் வளாகத்திலேயே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

காணி உரிமையாளர் குண்டு கிடப்பதைக் கண்டு பொஸாருக்கு அறிவித்துள்ளார், இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் SFG – 87 ரக கைக் குண்டை மீட்டுள்ளனர்.

குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெற்று – செயலிழக்கும் விசேட பொலிஸ் அதிரடி படையின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ள கிண்ணியா பொலிஸார், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முக்கிய அமைச்சுக்களில் மாற்றம்! - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை;
Previous articleபுதிய பொலிஸ் பேச்சாளராக நிஹால் தல்துவ நியமனம்!
Next articleமூச்சு விட முடியாமல் திணறும் நோயாளிகள்! எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள்;