Home Local news ஒரு இலக்கத் தகட்டில் இரு கார்கள்; சந்தேகத்தில் ஒருவர் கைது.

ஒரு இலக்கத் தகட்டில் இரு கார்கள்; சந்தேகத்தில் ஒருவர் கைது.

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி கடமையில்
ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார், வீதியில் பணித்த கார் ஒன்றைச்
சந்தேகத்தின் பேரில் நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.


இதன் போது அக் காரின் எஞ்சின் இலக்கமும் செசி இலக்கமும், வேறு வேறாக உள்ளமை
தெரியவந்துள்ளது. இதனையடுத்து வாடகைக்கு விடப்பட்டுவரும் அக்காரைக்
கைப்பற்றிய பொலிஸார் குறித்த காரின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையின்போது குறித்த காரின் இலக்கத்தில் குருநாகலில் வேறு ஒரு கார்
இருப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, பொலிஸார் இந்த இரு கார்களின் எந்தக் கார்
குறித்த இலக்கத்துக்கு உரியது எனக் கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தெற்கில் உருவாகியுள்ள புதிய பரபரப்பு; பீதியுடன் மக்கள்!
Previous articleவீட்டு மதில் வீழ்ந்து இளைஞன் பலி!
Next articleவைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளர் தப்பியோட்டம்; பொலிசார் தேடுதலில்.