Home Local news வீட்டு மதில் வீழ்ந்து இளைஞன் பலி!

வீட்டு மதில் வீழ்ந்து இளைஞன் பலி!

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில், வீட்டு சுற்று மதில் வீழ்ந்ததில், பேரின்பராஜா பேணுஜன் எனும் 18 வயது இளைஞன், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன், நேற்றிரவு தனது இரவு உணவை முடித்து விட்டு வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில், வீடு திரும்பாத அவரை, அவரது வீட்டுக்குப் பின்னால் உள்ள சுற்று மதில் உடைந்த நிலையில், கற்களுக்குள் சிக்குண்டு, இன்று (16)  அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா  நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கமைய, சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர்  பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தைப் பார்வையிட்டார்.

தடயவியல் பொலிஸார் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  5 ஆயிரம் ரூபா நிவாரணம் கேட்டு கிராம சேவகரை கத்தியால் தாக்க முயன்ற பெண்ணொருவர் கைது!
Previous articleநாமலுக்கு மேலுமொரு புதிய அமைச்சு
Next articleஒரு இலக்கத் தகட்டில் இரு கார்கள்; சந்தேகத்தில் ஒருவர் கைது.