Home Local news விசமிகளால் படகுகள் தீக்கிரை; திருகோணமலை – கும்புறுப்பிட்டியில் சம்பவம்.

விசமிகளால் படகுகள் தீக்கிரை; திருகோணமலை – கும்புறுப்பிட்டியில் சம்பவம்.

திருகோணமலை – கும்புறுப்பிட்டி, நாவற்சோலை கடற்கரையில் 6 மீன்படி படகுகள் இனந்தெரியாத விசமிகளால், இன்று (16) அதிகாலை 1 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளன.

இதன்போது, நான்கு படகுகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.

மீனவர்களுக்கு இடையிலான பகையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த இராஜாங்க அமைச்சர்;
Previous article4 அமைச்சுப் பதவிகளில் சற்று நேரத்தில் அதிரடி மாற்றம்!
Next articleபுதிய சுகாதார அமைச்சர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முதல் செய்தி!