Home cinema news மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்!

மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்!

நடிகை மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு  சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும்  மாளவிகா மோகனன், தற்போது மொடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
Previous articleசீன நிறுவனத்தின் தடுப்பூசி தொழிற்சாலை அம்பாந்தோட்டையில்!
Next articleபுதையல் தோண்டிய 6 பேர் கைது!