Home Local news கொவிட் தொற்றுடன் நடமாடிய நபரால் பரபரப்பு; மட்டக்களப்பில் சம்பவம்.

கொவிட் தொற்றுடன் நடமாடிய நபரால் பரபரப்பு; மட்டக்களப்பில் சம்பவம்.

மட்டக்களப்பில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்கள் மத்தியில் நடமாடிய போது கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஸ் தெரிவித்துள்ளார்.

இவர் இன்று(15) காலை மட்டக்களப்பு நகரில் பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரான குறித்த நபர் சனிக்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

தனிமைப்படுத்தலை உதாசீனம் செய்து இன்று காலை மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பரிவிற்குட்பட்ட பொதுச் சந்தையில் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டு மக்கள் மத்தியில் நடமாடியபோதே பொலிஸாரும் ,சுகாதார அதிகாரிகளும் கைது செய்துள்ளனர்.

கைதான தொற்றாளர் கரடியனாறு கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு நோய் காவு வண்டி மூலம்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Gallery Gallery Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பதவி விலகப் போகும் ஆளும் கட்சி எம்பி;
Previous articleகம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள்.
Next article3,435 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகினர்!