Home Local news மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம்!

மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம்!

புத்தல, கட்டுகஹகல்லகே குளத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மொனராகலை தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும், மொன ராகலை டீசீ வீதியச் சேர்ந்த மூன்று நண்பர்களே உயிரிழந்துள்ளனர்.

நேற்று குறித்த மூவரும் 2 மோட்டார் சைக்கிள்களில், புத்தல, கட்டுகஹகல்லகே குளத்துக்கு செல்வதாக சென்றுள்ளனர். இந் நிலையில் இரவாகியும் அவர்கள் மூவரும் வீடு திரும்பாததால், பெற்றோர் பொலிஸாருக்கு இதனை தெரியப்படுத்திய நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்நிலையிலேயே புத்தல பகுதிக்கு அவர்கள் சென்றமை தெரியவரவே, புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையிலேயே கட்டுகஹகல்லகே குளத்தின் அருகே குறித்த நண்பர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே மூவரும் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ர சந்தேகத்தில் பொலிஸார் குளத்தில் தேடுதல்களை சுழியோடிகளின் உதவியோடு முன்னெடுத்தனர்.

இந்நிலையில், மூவரின் சடலங்களும் இன்று (15)  காலை குளத்தின் ஆழமான அடிப்பகுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மதுபான போத்தல்களுடன் 70 வயது பெண்ணொருவரும், 18 வயது இளைஞனும் கைது!
Previous articleயாழில் கோர விபத்து – பெண்ணொருவர் பரிதாபமாக பலி
Next articleஅரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்!