Home jaffna news இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்

இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலை யின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் காலை சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.

செஞ்சோலை படுகொலையின் 15 ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் பதாகை முன்பாக சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு தொடர்பான தகவல் கிடைத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவம், வல்வெட்டித்துறை பொலிஸார் நினைவேந்தலை செய்ய விடாது இடையூறு ஏற்படுத்தினர்.

இதனையும் மீறி எம்.கே. சிவாஜிலிங்கம் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலுதவி மருத்துவ பயிற்சிக்காக பாடசாலை மாணவிகள் தங்கியிருந்த போது கடந்த 14.08.2006 அன்று இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 54 மாணவிகள் உள்ளிட்ட 60 இற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செஞ்சோலை படுகொலை யின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தருமபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Previous articleமட்டக்களப்பு வாகரை ஊரியன் கட்டு பேச்சியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு!! 30 பேருக்கு கொரோனா
Next articleகர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் கொவிட் – மகப்பேறு மருத்துவ நிபுணர் சிறிதரன்;