Home jaffna news 05 கோடி ரூபா போதைப்பொருளுடன் வல்வெட்டித்துறையில் மூவர் கைது! 3 போரில் ஒருவருக்கு கொரோனா

05 கோடி ரூபா போதைப்பொருளுடன் வல்வெட்டித்துறையில் மூவர் கைது! 3 போரில் ஒருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கடற்கரையோரப் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின்போது ஒருதொகை கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயன்படுத்திய வாகனமும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற கேரள கஞ்சா 126 கிலோ கிரோம் மீட்கப்பட்டது.

அத்துடன் 02 கிலோ ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

இவற்றின் இலங்கைப் பெறுமதி 50 மில்லியன் (05 கோடி ரூபா) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்.பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை பெருமளவு போதைப் பொருளுடன் கடற்படையினால் 3 போரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படை ரோந்து நடவடிக்கையின்போது சுமார் 05 கோடி ரூபா போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கிளிநொச்சி சந்தையில் 7 பேருக்கு தொற்று உறுதி
Previous articleஅமெரிக்கா, இந்தியாவை விடவும் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகம்:
Next articleநிர்ணய விலைக்கு மேலதிகமாக அரிசி விற்பனை செய்தால் ஒரு கோடி ரூபா வரை தண்டப்பணம்!