Home முல்லைத்தீவு செய்திகள் வீதிகளில் வெடிபொருட்களின் அபாயம்!

வீதிகளில் வெடிபொருட்களின் அபாயம்!

முல்லைத்தீவு – கரைதுறைபற்று வீதியில் வெடி பொருட்களின் அபாயம் உள்ளதாக கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் இ.ஹஜீதரன் தெரிவித்தார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் வீதிக்கு விறகு சேகரிப்பதற்கு சென்ற நபரொருபர் வெடி பொருளில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின் அப்பகுதியில் வெடி பொருட்களின் அச்சம் உணரப்பட்டுள்ளது.

மக்கள் நடமாடுகின்ற பகுதிகளில் வெடி பொருட்களின் அபாயம் இருப்பது மக்களுக்கு உயிராபத்துகளை விளைவிக்கும் என தெரிவித்தார்.

வீதி பகுதியில் உள்ள வெடி பொருட்களை அகற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலகத்திற்கு உண்டு.

வெடி பொருட்களின் அச்சுறுத்தல், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஏனைய சுய தொழில் முயற்சிகளுக்கு பாதிப்புகளை உருவாக்கி உள்ளது எனவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திருவிழா… அன்னதானம்: முல்லைத்தீவில் பிள்ளையார் தனிமைப்படுத்தப்பட்டார்
Previous articleவவுனியாவில் 76 பேருக்கு கோவிட் தொற்று!
Next article5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் யாழில் மூவர் கைது!