Home Local news செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் – தடைகளை தாண்டி சுடரேற்றிய சிவாஜி!

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் – தடைகளை தாண்டி சுடரேற்றிய சிவாஜி!

செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்று சனிக்கிழமை காலை சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.

குறித்த அஞ்சலிக்கு பொலிஸார்,  இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும் , அவற்றினையும் மீறி படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்கொண்ட விமான குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  O/L பெறுபேறு வெளியீடு; அடுத்த வாரம் தீர்மானம்.
Previous articleமீண்டும் டோலிவுட்டில் வில்லனாகும் விஜய்சேதுபதி!
Next articleதடுப்பூசிக்கு எதிராக சில மத போதகர்கள் பிரச்சாரம்; மக்களே எச்சரிக்கை!