Home cinema news மீண்டும் டோலிவுட்டில் வில்லனாகும் விஜய்சேதுபதி!

மீண்டும் டோலிவுட்டில் வில்லனாகும் விஜய்சேதுபதி!

 மீண்டும் டோலிவுட்டில் வில்லனாகும் விஜய்சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவைப் போல் வில்லன் வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் திறம்பட நடித்து அசத்தினார்.

இதில் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நடிக்க சம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  உச்சகட்ட கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்; லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
Previous article50 சதவீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு உத்தரவு!
Next articleசெஞ்சோலை படுகொலை நினைவேந்தல் – தடைகளை தாண்டி சுடரேற்றிய சிவாஜி!