Home Local news 50 சதவீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு உத்தரவு!

50 சதவீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு உத்தரவு!

இலங்கை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவசர நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் போன்றோருக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிசேரியன் போன்ற வழமையான நடவடிக்கைகளில் தலையிடாமல் கொவிட் நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் இடம் ஒதுக்குவதற்காகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடைகின்ற நோயாளர்களை, மேலதிக சிகிச்சைகளுக்காக இடைநிலை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதன் மூலம் பிரதான வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக புதிய நோயாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஒரு இலக்கத் தகட்டில் இரு கார்கள்; சந்தேகத்தில் ஒருவர் கைது.
Previous articleஇறுதிப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
Next articleமீண்டும் டோலிவுட்டில் வில்லனாகும் விஜய்சேதுபதி!