Home Local news சினோபார்ம் தடுப்பூசியை விற்ற சிற்றூழியர் சிக்கினார்!

சினோபார்ம் தடுப்பூசியை விற்ற சிற்றூழியர் சிக்கினார்!

தலா 2000 ரூபாவிற்கு சினோபார்ம் தடுப்பூசியை  விற்பனை செய்த வைத்தியசாலை சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ லுனாவ வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிற்றூழியர் ஒருவரே இவ்வாறு தடுப்பூசி விற்பனை செய்துள்ளார்.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை சட்டவிரோதமான முறையில் குறித்த சிற்றூழியர் விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் கணக்காய்வு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தரவுகளுக்கு அமைய குறித்த சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சில காலங்களாகவே இவ்வாறு தடுப்பூசிகளை பணத்திற்கு விற்பனை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மொரட்டுவ கொரல்லவல பகுதியைச் சேர்ந்த குறித்த சிற்றூழியர் மொரட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர் மொரட்டுவ நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  7 வயது சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் கண்ணீர்மல்க போராட்டம்..! கொலையா? விபத்தா? மற்றொரு சிறுவன் கைது
Previous articleசமோசா விலையேறியதால் இளைஞன் மனமுடைந்து தற்கொலை!
Next article100 மெற்றிக் தொன் ஒட்சிசனை இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய தீர்மானம்..!