Home Local news துறைமுக அதிகார சபை ஊழியர்கள் 600 பேருக்கு கொரோனா.

துறைமுக அதிகார சபை ஊழியர்கள் 600 பேருக்கு கொரோனா.

more news

கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, 593 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவம் தெரியவருகின்றது.

கடந்த மே மாதம் முதல் துறைமுகத்தில் பிசிஆர் ஆய்வுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், துறைமுக ஆணையத்தில் பிசிஆர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், ஏராளமான நோயாளிகளைக் கண்டறிய முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

துறைமுகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா இரண்டாவது தடுப்பூசியின் அதிகப்படியான அளவு காரணமாக துறைமுக ஊழியர்களிடையே கொரோனா பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும்
சுதந்திர துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் லால் பெங்கமுவ தெரிவித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மாந்தை மேற்கு பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்
Previous articleசிறுவர்களின் காணொளிகள், புகைப்படங்களை பதிவேற்றிய நபர் கைது!
Next articleயாழ்.தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கொரோனா தொற்று..! மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு அழைக்கும் நிர்வாகம்